×

செங்கல்பட்டில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குடும்ப நலத்துறை சார்பில், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் குறித்து குடும்ப நல உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்களும், மருத்துவர்களும், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினம் குறித்து விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு, கலெக்டர் ராகுல்நாத் பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், உலக மக்கள் தொகை தினம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற துணிப்பைகளை அவர் அனைவருக்கும் வழங்கினார். பின்னர், உலக மக்கள் தொகை தினம் குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை ராகுல்நாத், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்றது. இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு இணை இயக்குநர் (நலப்பணிகள்) தீர்த்தமலை, காஞ்சிபுரம் துணை இயக்குநர் (குடும்ப நலம்) மலர்விழி, செங்கல்பட்டு துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பரணிதரன், செங்கல்பட்டு துணை இயக்குநர் (காசநோய்) காளீஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, காஞ்சிபுரம் மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் நாகராஜன், காஞ்சிபுரம் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தாரா, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் குடும்ப நலச் செயலக ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : World Population Day ,Chengalpattu ,World Population Day Awareness Rally ,Rath ,District Collector ,Rahul Nath ,Collector ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...